உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கார்த்திகை வழிபாடு!

திருக்கார்த்திகை வழிபாடு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் பாலமுருகன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகளும், இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஐயப்பன்கோயிலில் காலை அபிஷேகம், மாலையில் சிறப்பு பஜனை , இன்னிசை கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !