உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் கோவில்களில் கார்த்திகை தீப விழா!

திருவாரூர் கோவில்களில் கார்த்திகை தீப விழா!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விசேஷ பூஜைகள் மற்றும் காவடி புறப்பாடும் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே யுள்ள ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் குருபரிகார ஸ்தலமான (நவக்கிரகஸ்தலங்களில் ஒன் றாகப் போற்றப்படும்) இங்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய் யப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற் பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் சாத்தையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நீடாமங்கலம்காசிவிசுவநாதர்கோயில், பூவனூர் சதுரங்கவல்ல பநாத ர்சாமுண்டீஸ்வரி அம்மன்கோயில், நீடாமங்கலம் கேகாமு கேஸ் வரர் கோயில் ஆகிய கோயில்களிலும் திருக்கார் த்திகை தீபத்திருவிழா அதி விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கே ற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயலில் திருக்கார்த்திகை தீபத்தி ருவிழாவை யொட்டி பக்தர்கள் காவடி எடுத்தனர். பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !