உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கோவிலில் புதிய தீபஸ்தம்பம்!

சென்னிமலை கோவிலில் புதிய தீபஸ்தம்பம்!

சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவிலில், புதிதாக தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோவிலில், கும்பாபிஷேகத்துக்குப்பின், விடுபட்டுப்போன பல பணிகள் நடந்து வருகிறது. இதில், புதிய தீபஸ்தம்பம் அமைக்கும் பணியும் ஒன்று.
கார்த்திகை தீபத்திருவிழாவில் விளக்யேற்ற, தற்போது தீபஸ்தம்பம் நிறுவப்பட்டது. கோவிலில் ராஜாகோபுரத்துக்கு முன்புறம், 25 அடி உயரத்தில் பிரமாண்டமாக தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டது.தீபஸ்தம்பம் அமைக்க, 6 லட்சம் செலவு ஆனது. இதில், நான்கு பக்கமும், முருகன், விநாயகர், தட்சணாமூர்த்தி, பிரம்மா ஆகிய சுவாமி படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்று, திருக்கார்த்திகை தீபத்திருநாளான நேற்று, விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !