உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி தூய அலங்கார மாதா ஆலய திருவிழா!

கன்னியாகுமரி தூய அலங்கார மாதா ஆலய திருவிழா!

நாகர்கோவில்: கன்னியாகுமரி தூய அலங்காரமாதா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை பத்து நாட்கள் இந்த விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. விழாவில் தினமும் மறையுரை, திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11-ம் தேதி ஏழாம் நாள் விழாவிலும், 12-ம் தேதி எட்டாம் நாள் விழாவிலும் சப்பரபவனி நடக்கிறது. 13-ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு புனித சூசையப்பரின் தேர்பவனி நடக்கிறது. 14-ம் தேதி பத்தாம் நாள் விழாவில் அதிகாலை 4.30 மணிக்கு தங்க தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து காலை எட்டுமணி முதல் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !