தேசியப் புனித நூலாக பகவத் கீதை!
ADDED :4067 days ago
புதுடில்லி: தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.டில்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் பகவத் கீதை தொடர்பான விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அசோக் சிங்கால், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தேசியப் புனித நூலாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.