அய்யப்பன் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :3954 days ago
குறிச்சி : குனியமுத்துாரை அடுத்த மணிகண்டன் நகர், அய்யப்பன் கோவிலில், லட்சார்ச்சனை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. குனியமுத்துாரை அடுத்த இடையர்பாளையம் ரோடு, மணிகண்டன் நகரிலுள்ள அய்யப்பன் கோவிலில், கடந்த ௫ம் தேதி, கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் ஐயப்பன் திருவீதி உலா நடந்தது. நேற்று சபரிமலை யாத்திரைக்கான கட்டுநிறை பூஜை நடந்தது. இதன் தொடர்ச்சியாக, அன்னதானம் நடந்தது. இறுதியாக லட்சார்ச்சனை நிறைவு மற்றும் தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது. திரளானோர் பங்கேற்றனர்.