மாளிகைப்புறம் சந்நிதி!
ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கத்திலுள்ள மாளிகைப்புறம் சந்நிதியில் மஞ்சமாதா என்ற பெண் தெய்வம் அருளுகிறாள். இவள் ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷி ஆவாள். அவரது அருளுடன் அழகிய வடிவம் பெற்று, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவமிருந்து வருகிறாள். இங்கு மஞ்சள்பொடி துõவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வார்கள். இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி வைக்கப் பட்டு பூஜை செய்யப்படும். இவளது சந்நிதி அருகில் நாகர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர் களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்குவர்.ஐயப்பன் கோயில் வழிபாடு என்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் அல்ல! பொருள்உணர்ந்து சென்று வருபவர் அந்த ஐயப்பனாகவே மாறி விடுவார்.சுவாமியேசரணம் ஐயப்பா!