பெற்றோருக்காக பிள்ளைகளா பிள்ளைகளுக்காக!
கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை திதியில் துவங்கி, மார்கழி வளர்பிறை சஷ்டி திதி வரை நோற்கும் விரதத்தை விநாயகர் சஷ்டி விரதம் என்பர். தந்தையின் நலனுக்காக பெரிய மகனும், தாயின் நலனுக்காக இளைய மகனும் இந்த விரதத்தை நோற்பது விசேஷம். ஒரு குடும்பத்தில் ஒரே மகன், ஒரே மகள் மட்டும் இருந்தால் அவர்களின் நலனுக்காக தாயும், தந்தையும் சேர்ந்து விரதம் இருக்க வேண்டும். 21 இழை கொண்ட நுõலை மஞ்சளில் நனைத்து, ஆண்கள் வலது கரத்திலும், பெண்கள் இடது கரத்திலும் காப்பு கட்டிக் கொள்ள வேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் ஏதேனும் ஒரு பலகாரத்தை விநாயகருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். விநாயகர் குறித்த பாடல்கள் பாடி வணங்க வேண்டும். பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை, செல்வ அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வி விருத்தி பெற இந்த விரதம் இருக்கலாம். விரதமிருக்கும் நாட்களில் காலையில் சாப்பிடாமல் உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். விரதம் முடிந்த மறுநாள் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி காப்பைக் கழற்றி மிதக்க விட்டு விட வேண்டும். டிசம்பர் 7 முதல் 27 வரை இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.