சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில் லட்ச தீப பெருவிழா!
ADDED :4311 days ago
திருத்தணி: சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று, லட்சதீபத் பெருவிழா நடந்தது. இதில், திரளான பெண்கள், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது, மனோன்மணி உடனுறை சதாசிவலிங்கேஸ்வரர் கோவில். இதில், நேற்று, லட்ச தீப திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.