உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் டிச.,16ல் பெயர்ச்சி விழா!

சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் டிச.,16ல் பெயர்ச்சி விழா!

சிவகங்கை : சிவகங்கை சனீஸ்வரர் கோயிலில் டிச.15ல் விக்னேஸ்வரர் பூஜையுடன் "சனிப்பெயர்ச்சி விழா துவங்குகிறது. சிவகங்கை மஜீத் ரோடு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவை யொட்டி வரும் 15ம்தேதி காலை 8 மணிக்கு அனுக்கை விநாயகர் பூஜை, புண்ணியா வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், வேதிகா அர்ச்சனை, பூர்ணாகுதி நடைபெறும். டிச.,16 அன்று காலை 8 மணிக்கு 108 கலச பூஜை, யாகசாலை ஆரம்பம், கோ பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, மூலமந்திர ஜெபஹோமமும், பகல் 11 மணிக்கு கடம் புறப்பாடும் நடக்கும். பின்னர் 108 கலசங்கள் அபிஷேகம், சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். பிற்பகல் 2:43 மணிக்கு, பெயர்ச்சியை யொட்டி மகா தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !