சந்தானராமசுவாமி கோயிலில் 108 கலச பூஜைகள், திருமஞ்ஜனம்!
திருவாரூர் : நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடை பெற்ற 9வது வருட பூர்த்திவிழாவை முன்னிட்டு நேற்று 108 கலச பூஜைகள் மற்றும் திருமஞ்ஜனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொ ண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மமகாராஜாவால் கி.பி.1761ல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமிகோயில் கட்டப்பட்டது. மன்னர் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோயில் கட்ட ப்பட்டதாக வரலாறு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற் றது.வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் மகாகு ம்பாபிஷேகம் நடை பெற்று 9வருட பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 108 புனித நீர் கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சீதா, லெட்சுமண, ஹனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு திருமஞ்ஜனமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.