நாகாத்தம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :4053 days ago
முருக்கேரி: முருக்கேரியில் நாகாத்தம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடந்தது. மூலவருக்கு நேற்று காலை 9.30 மணிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. 10.00 மணிக்கு கோவில் முன் சிறப்பு யாகத்தை தமிழ் முறைப்படி சீனுவாச சுவாமிகள் செய்தார். கணபதி பூஜை, மழை வேண்டி வர்ண பகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.