கிளாப்பாளையம் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3956 days ago
உளுந்தூர்பேட்டை: கிளாப்பாளையம் கிராமத்தில் தண்டலை அய்யனாரப்பன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா கிளாப்பாளையம் கிராமத்தில் தண்டலை அய்யனாரப்பன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 6ம் தேதி மகா கணபதி பூஜை, மகா பூர்ணாஹூதி பூஜை, தீபாராதனை, யாக சாலை பூஜைகள், முதலாம் கால பூஜை நடந்தது. நேற்று முன் தினம் தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல், யாக சாலைகள், திரவ்ய யாகம், யாத்ரா தானம், அருள் கலசங்கள் ஆலயம் வலம் வருதல், காலை 7 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.