உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை

அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை

ஊத்துக்கோட்டை: அய்யப்ப சுவாமி கோவிலில், 45ம் ஆண்டு விளக்கு பூஜை விழா, வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டையில், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம், அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, 45ம் ஆண்டு விளக்கு பூஜை விழா, வரும், 12ம் தேதி துவங்குகிறது. வரும், 12ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை, 06:00 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் சன்னிதியில் கணபதி ஹோமமும், தொடர்ந்து அங்குள்ள அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதையடுத்து, 13ம் தேதி, சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு, கேரளாவின் பாரம்பர்ய இசையான செண்டை மேளத்துடன், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, அய்யப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமிக்கு முன் பெண்கள், சிறுமிகள் விளக்கு ஏந்திச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !