வஞ்சியம்மன் கோவில் கும்பாபிேஷகம்!
நெகமம்: நெகமம் அருகேயுள்ள பெரியகளந்தை வஞ்சியம்மன் கோவில் நேற்று கும்பாபி ேஷகம் நடந்தது. பெரியகளந்தை வஞ்சியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில், கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் போன்றவை கட்டப்பட்டு, வர்ணம் பூசி புதுப்பொலிவு செய்யப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
அதில், கடந்த 8ம் தேதி மாலை 5.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காம்கால யாக பூஜை நடந்தது. காலை 6.40 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்தார். இதில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர். பின் வஞ்சியம்மனுக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அ பிேஷக அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இம்கும்பாபிேஷகத்தில், பெரியகளந்தை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இ ருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மணிகண்டன், விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.