திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்!
ADDED :4038 days ago
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் தர்ம சாஸ்தா டிரஸ்ட் மற்றும் அய்யப்ப பக்த ஜன சங்கம் சார்பில் 55ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த மாதம் 11 ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று மாலை கொடியேற்ற உற்சவ நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை தந்திரி கண்டரு ÷ மாகனரு தலைமையில், கொடியேற்ற வைபவங்கள் நடைபெற்றன. விழாவில், இன்று 1,008 சங்காபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை நவகல அபிஷேகம், வரும் 13ல் பறையெடுப்பு, 15ல், சபரிமலை தந்திரி மகேஷ்வரன் தலைமையில் பவானி கூடுதுறையில் ஆறாட்டு உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.