உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

கைலாசநாதர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம்!

புவனகிரி: புவனகிரி கைலாசநாதர் கோவிலில் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் வேத விற்பன்னர்களும் கோவில் அர்ச்சகர்கள்  சிவஸ்ரீ ஆனந்த், குமார் ஆகியோர் கைலாசநாதருக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம், பன்னீர், பால் அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து  மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !