நீதிகாத்த ராஜ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா!
ADDED :4037 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் நீதிகாத்த ராஜ விநாயகர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9ம் தேதி மாலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி, நவக்கிர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்து முதல் கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 2ம் யாகசாலை பூஜை, சபர்சாகிதி, மகா தீபாராதனைகள் நடைபெற்று கடம் புறப்பாடாகி நீதிகாத்த ராஜவிநாயகர் கோவில் விமானம் காலை 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ராஜ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.