அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3959 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டியில் புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கோவிலூர், மணம்பூண்டியில் செல்வகணபதி, கங்கையம்மன், பாலமுருகன், பாலமணிகண் டன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன. இதற்கான கும்பாபிஷேகம் நேற்று காலை 7.15 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த 8ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, சபர்சாகுதி, திரவ்யாகுதி முடிந்து 7 மணிக்கு கடம் புறப்பாடாகியது. 7.15 மணிக்கு மூலஸ்தான கலசம் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தபோவனம் சுவாமிநாத குருக்கள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.