திண்டிவனம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3959 days ago
திண்டிவனம்: திண்டிவனம் முருங்கபாக்கம் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி இரண்டு கால யாகசாலை பூஜைகளை தமிழ் திருமுறைப்படி, சுந்தரநாதன் ஆன்மீக அறக்கட்டளையினர் நடத்தினர். தில்லை கைலாசநாதர் இசைக்குழு பூதகன சிவவாத்திய இசை சிவனடியார் திருக்கூட்டத்தினர் சிவ வாத்தியங்களை இசைத்தனர். காலை 10.15 மணிக்கு மூலவர் விமான கலசத்தின் மீது யாகசாலை திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. மகா அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை சங்கட சதுர்த்தி பூஜையும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், ஸ்தபதி ராதாபுரம் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.