உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமுளி-பம்பை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு!

குமுளி-பம்பை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு!

குமுளி: "சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குமுளி--பம்பை வழித்தடத்தில் கூடுதலாக ஐந்து பஸ்கள் இயக்கப்படும்,” என கேரள அரசு போக்குவரத்து கழக குமுளி கட்டுப்பாட்டு ஆய்வாளர் சுரேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இடுக்கி மாவட்டம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். தற்போது குமுளியில் இருந்து பம்பைக்கு 10 கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தவிர 45 ஐயப்ப பக்தர்கள் இருந்தால் உடனடியாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமுளி டிப்போவில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் 24 மணி நேரம் செயல்படும் விதத்தில் தகவல் மையம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்குச்செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை அனுசரித்து, குமுளி--பம்பை வழித்தடத்தில் கூடுதலாக ஐந்து அரசு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் ஜனவரி முதல் வாரம் முதல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !