உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி!

குச்சனூர் கோயிலில் டிச., 16ல் சனிப்பெயர்ச்சி!

சின்னமனுார்: இங்கு சனி பகவான் சுயம்புவாக தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, உப்பு, காக்கை பொம்மை வைத்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். டிச.,16ல் சனிப் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதற்காக அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சியை (டிச.,16) முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன.அனுக்கிரக தலம்: இங்கு மூலவர் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார். சனி திசை நடப்பவர்கள் சுரபி நதியில் நீராடி சுயம்பு மூலவரை தரிசித்தால் உக்கிர பார்வை குறையும். டிச.,16 பிற்பகல் 2:45 மணிக்கு, துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அர்ச்சகர் சிவக்குமார் கூறுகையில், “சுயம்பு சனீஸ்வரர் தலத்தில் வழிபடுவோருக்கு சனி திசை முடிந்த பின் நன்மைகள் செய்வார். சனி திசை நடக்கும் போது உக்கிரம் இல்லாமல் பார்த்துக் கொள்வார். இதற்காக காக்கை உருவத்தை இங்கு வைக்கலாம்; எள் தீபம் ஏற்றி வழிபடலாம், ” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !