தடையின்றி சோறு கிடைக்க வேண்டுமா?
சாப்பாடு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது. ஆனால், யாரோ சிலருக்கு தான் அறுசுவை உணவு கிடைக்கிறது. நிறைய பணத்தைக் கட்டி வைத்திருப்பவர்களுக்கு கூட அறுசுவையும் சாப்பிட யோக்கியதை இல்லாமல் போகிறது. காரணம் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அவர்களைப் பீடித்திருக்கிறது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, எல்லாருமே சிறந்த உணவு அருந்த வேண்டுமா! திருப்பாவையைப் பக்தியுடன் படியுங்கள். ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் முப்பது பாடல்கள் உள்ளன. இதைப் பாடினால் சுவையான உணவு, பால் வளம், தடையற்ற மழை வளம் எல்லாம் கிடைப்பதுடன், நாடே மங்களகரமாக இருக்கும். ஆண்டாள் பூமித்தாயான பூமாதேவியின் அம்சம் என்பதால், உலகமெங்கும் சமாதானம் திகழும். திருப்பாவையில், திருமாலின் அவதார லீலைகள் எடுத்துச் சொல்லப்படுவதால், அதைப் படிக்கப் படிக்க கடவுளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். இந்த எண்ணம் மட்டும் வேரூன்றி விட்டால், நமது பாவம்எல்லாம் நீங்கிப் போகும். இப்படி சங்கிலி தொடர் போல், ஒன்றைத் தொட்டு ஒன்று கிடைத்து பக்தி நம் மனதில் கற்பக விருட்சம் போலும், அட்சய பாத்திரம் போலும் வளர்ந்து கொண்டே போகும்.