நாளை சனி பெயர்ச்சி; பக்தர்களுக்கு அழைப்பு!
ADDED :3958 days ago
ஈரோடு : சனி பகவான், துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு நாளை (16ம் தேதி) மதியம், 2.44க்கு பிரவேசிக்கிறார்.
இதையொட்டி அன்று காலை, 11.30 முதல், 2.44 மணி வரை சிறப்பு பரிகார யாக பூஜைகள் நடக்கிறது.மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசியில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம். அன்று மதியம், 12.30 முதல், இரண்டு மணி வரை, ஈரோடு காரைவாய்க்கால் சுயம்பு ஸ்ரீநாகர் கோவிலில், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், எள் அர்ச்சனை நடக்கிறது.