உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் நடத்த ஏற்பாடு!

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் நடத்த ஏற்பாடு!

துறையூர்: துறையூர் அடுத்த சிங்களாந்தபுரத்தில் உள்ள பழமையான சிவாலயத்தில், 15, 16 ஆகிய தேதிகளில் சனிப்பெயர்ச்சி பரிகார சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது. துறையூர் அடுத்த சிங்களாந்தபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அமரசுந்தரேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை, (16ம் தேதி) நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சிக்கு பரிகார சிறப்பு ஹோமம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சியை ஒட்டி, 15ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம் நடைபெறும். 16ம் தேதி காலை, 6 மணிக்கு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார ஹோமம் செய்து வைக்கப்படும். காலை, 10 மணிக்கு கோ பூஜை நடைபெறும். 12 மணிக்கு சனிஸ்வர பகவானுக்கு அபிஷேகம், மதியம், 2 மணிக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்யப்படும். சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் மதியம், 2.44 மணிக்கு தீபாராதனை வழிபாடு செய்து, பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !