வைரபுரம் சோமசுந்தரேஸ்வரருக்கு 40 லட்சம் ருத்திராட்ச அபிஷேகம்!
திண்டிவனம்: வைரபுரம் சோமசுந்தரேஸ்வரருக்கு 40 லட்சம் ருத்திராட்ச மணிகளால் மகா அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. சென்னை அம்பத்தூர் அப்பர் கண்டமணி சீர்தொண்டு பரவுதல் கைலாய வாத்திய குழுவினர், 40 லட்சம் ருத்திராட்ச மணிகளால் அபிஷேகம் நடத்தினர். முன்னதாக அதிகாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. ருத்திராட்ச மணிகளால் பிரபை வடிவமைத்து நால்வருடன் நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை சோமசுந்தரேஸ்வரருக்கு ருத்ராட்ச மணிகளால் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ருத்திராட்ச மணிகள் வழங்கப்பட்டது. பக்தர்களிடம் காகிதம் வழங்கி, ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை 108 முறை எழுதிய பிரசுரங்களை தொகுத்து எடுத்து சென்றனர்.