அவலூர்பேட்டையில் கலச விளக்கு வேள்வி பூஜை!
ADDED :3963 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணிதல் விழா நடந்தது.அவலூர்பேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் ஜெயபாலின் வழிகாட்டுதலின் படி கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி மாலை அணிதல் விழா நடந்தது. மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட வேள்விக்குழு ஜான்சி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பரத்குமார், ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேள்வி பூஜையை துவக்கி வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி மாலை அணிந்தனர். இதில் வெண்ணிலா மணி, சரவணன், அண்ணாமலை, வெங்கிடேசன், வசந்தி, ராணி, மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.