உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப் பொருள் நாயனார் சித்தி வளாகத்தில் இன்று குருபூஜை விழா நடக்கிறது.திருநீற்றுச் செல்வர் என போற்றப்பட்டு, திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இவருக்கு சித்தி வளாகம் அமைந்துள்ளது.நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சித்தி வளாகத்தில் துறவிகள் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகின்றனர். காலை 8.30 மணிக்கு பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர், மெய்ப்பொருள் நாயனாருக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு, ஒளிவழிபாடு, மெய்ப்பொருள் நாயனார்க்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை மெய்ப்பொருள் நாயனார் சித்திவளாக வழிபாட்டு மன்றம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !