மார்கழி பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை!
காரிமங்கலம்: காரிமங்கலம், மலை கோவிலில் தனூர் மார்கழி மாத சிறப்பு பூஜை நாளை (16ம் தேதி) துவங்குகிறது. மார்கழி தனூர் மாத பிறப்பை முன்னிட்டு, காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், அதிகாலை 5 மணிக்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் செய்துள்ளனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த, பென்னேஸ்வரமடம் ஸ்ரீ வேத நாயகி சமேத பென்னேஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடக்கிறது. இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், சேலம் ரோடு சக்தி விநியாகர் கோவில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோவில். புதுப்பேட்டை சிவன் கோவில், பழைய பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலஙகார பூஜை நடக்கிறது.
தர்மபுரி, கோட்டை மல்லிகார்ஜீனேஸ்வரர் கோவில், குமாரசாமிபேட்டை சிவ சுப்பிரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் சக்தி விநாயகர் வேல் முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.வி., ரோடு சாலை விநியகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், வெளி பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.