உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு!

சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு!

சபரிமலை: சபரிமலையில், பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில், மண்டல, மகரவிளக்கு காலத்தில், அதிகாலை 4:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையும், மாலை 4:00 முதல், இரவு 11:00 மணி வரையும், பக்தர்கள் சரிசனம் செய்ய வசதியாக நடை திறக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்தால், தந்திரியுடன் ஆலோசனை நடத்தி, ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு வந்தது. புதிய அட்டவணைப்படி, அதிகாலை 3:00 மணி முதல், பகல் 1:45 மணி வரையும், மாலை 3:00 முதல், இரவு 11:30 மணி வரையும் நடை திறந்திருக்கும். இதன்மூலம், 19:15 மணி நேரம், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !