உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாரில் குவிந்த பக்தர்கள்!

சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாரில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி: திருநள்ளார், சனீஸ்வர பகவான் கோவிலில், இன்று சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. காரைக்கால், திருநள்ளாரில் உள்ள பிரசித்தி பெற்ற, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

சனி பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா, இன்று (16ம் தேதி) நடக்கிறது. இன்று, சனி பகவான், துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்கிறார். இதையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், திருநள்ளாரில் குவிந்துள்ளனர். பக்தர்கள் தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக, புதுச்சேரி மற்றும் தமிழக அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தங்க கவசத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !