ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!
ADDED :4269 days ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 1,008 சங்காபிஷேகம் விழா, நேற்று நடந்தது.செங்கல்பட்டு ராஜாஜி தெருவில், காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், 1,008 சங்காபிஷேகம் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, 5வது சோமவாரத்தையொட்டி, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம் விழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.