உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்!

ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்!

திருச்சி: திருச்சி ஐயப்பன் கோவிலில் நேற்று நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருச்சி, லாசன்ஸ் ரோடு ஐயப்பன் கோவிலில், நான்காவது கும்பா பிஷேகத்தையொட்டி கடந்த மாதம், 10 ம் தேதி பாலாயம் நடந்தது. தொடர்ந்து, கோவில் முகப்பு, மூலஸ்தானம், மணிமண்டபம், கன்னி மூல கணபதி, சன்னதி அம்மன் கோவில், தியான மண்டபம் ஆகியவை சீரமைப்பு பணிகள் நடந்தது

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த, 11ம் தேதி மாலை, கணபதி பூஜையும், 13ம் தேதி காலை, ஸ்வாமி ஐயப் பனுக்கு, 1,008 வலம்புரி சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மதியம், 12.15 மணியில் இருந்து, 1.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை, கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவ விழா துவங்கியது. வரும், 19ம் தேதி, களபாபிஷேகம், இரவு பள்ளி வேட்டை நடக்கிறது. 20ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !