சாளரப்பட்டியில் மண்டல பூஜை இன்று துவக்கம்!
ADDED :4282 days ago
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே சாளரப்பட்டியில், ஐயப்ப பக்தர்கள் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மண்டல பூஜை இன்று (16ம் தேதி) காலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடக்கிறது. பின், விநாயகர், சின்னாண்டவர், கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும், மாலை 4.00 மணிக்கு திருவீதி உலா நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளனர்.