உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனுார் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கோலியனுார் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் பெரியநாயகி சமேத வாலீஸ்வர சுவாமி கோவிலில்  நேற்று சனிப் பெயர்ச்சி விழா நடந்தது. சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருட்சிக ராசிக்கு பிரவேசிப்பதையொட்டி, கோவிலில் உள்ள கூர்மாங்க சனீஸ்வர பகவானுக்கு கடந்த 6ம் தேதி சனி ஹோரையில் சனிப்ரீதி, ஹோமம் நடந்தது. தொடர்ந்து 13ம் தேதி மாலை சனீஸ்வர பகவானுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு  ருத்ரபாராயணத் துடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று மதியம் 2:44 மணிக்கு, சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன், வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் முத்துலட்சுமி, சரக ஆய்வர் சரவணன், கோவில்  குருக்கள் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !