கைலாசநாதர் கோயிலில் பரிகார பூஜை!
ADDED :4103 days ago
நத்தம் : நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார பூஜை நடந்தது. நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் நேற்று 2.16க்கு சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடந்தது. சனிபகவானுக்கு பதினாறு வகை அபிஷேகமும், எள், எண்ணெய் விளக்கு ஏற்றி பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறநிலையத்துறை செயல்அலுவலர் ஞானசேகரன் மற்றும் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.