உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் கோயில் குளம் நிரம்பியது!

திருவெற்றியூர் கோயில் குளம் நிரம்பியது!

திருவாடானை: திருவாடானை பகுதியில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நெல்பயிருக்கு தேவையான கடைசி கட்ட மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயில் முன்புள்ள தீர்த்தகுளம் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அருகில் உள்ள தெருக்குழாய்களில் தண்ணீரை பிடித்து, தலையில் தெளித்து விட்டு கோயிலுக்கு சென்று வந்தனர். தற்போது பெய்துள்ள மழையால் குளம் நிரம்பியுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,""கடந்த 4 ஆண்டுகளாக குளம் நிரம்பாதது கவலையாக இருந்தது. தற்போது குளம் நிரம்பியது. முடிகாணிக்கை செலுத்தி விட்டு, குளத்தில் குளிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !