ஓசூர்மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3980 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அய்யப்பா சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் ஓசூர்மாரியம்மன் கோவிலில் அய்யப்பா சேவாசங்கம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சிவஞானதேசிக பரமாச்சார்யா சுவாமிகள் தலைமை தாங்கினார். குமாரசாமிதம்பிரான்சுவாமிகள் பூஜையை துவக்கி வைத்து, திருவிளக்கின் மகிமை குறித்து பேசினார். 108 பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இரவு அய்யப்பன் வீதியுலா நடந்தது. அய்யப்பா சேவா சங்க நிர்வாகிகள் சிகாமணிராஜன், முருகேசன், ஆறுமுகம், சிவதனசேகரன், காத்தவராயன், ராயர், கணேசன், மாசிலாமணி, கோதண்டபாணி, மாரி, பொன்னுரங்கம், ராமச்சந்திரன், அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.