ஆஞ்சநேயர் கோவில் ஆண்டு விழா!
ADDED :3980 days ago
சின்னசேலம்: சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவில் 83 ஆண்டு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. சின்னசேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 83ம் ஆண்டு விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு அன்று மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை சீத்தராமன் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.