அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை!
காரிமங்கலம்,: அனுமன் ஜெயந்தியொட்டி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில்களில், நாளை (21ம் தேதி) சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காரிமங்கலம் கெரகோடஹள்ளி வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, நாளை நடக்கிறது. இதையொட்டி, அதிகாலையில் சிறப்பு ஹோமமும், 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாத்துதல், செந்தூர காப்பு, வெற்றிலை மாலை சாத்துதல் உட்பட சிறப்பு அலங்காரங்கள் நடக்கிறது.
*காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு ரோடு, ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சந்தனகாப்பு ஆகியவை நடக்கிறது.
*தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், அதிகாலை, 3 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், 4 மணிக்கு மேல், 6 மணிக்குள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
*தர்மபுரி ஹரிஹரநாத கோவில் தெருவிலுள்ள தாசஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்ட்ரோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு கடமடை ஆஞ்சநேயர் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக் கவசம் சாத்துதல், வடைமாலை சாத்துதல், சந்தனக்காப்பு உட்பட அலங்காரங்கள் நடக்கிறது.