உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து உற்சவம் துவங்கியது!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து உற்சவம் துவங்கியது!

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் அடுக்கு பதக்க ராஜகிரிடம் என்ற நீள் முடியுடன் வைர அபயஹஸ்தம் அணிந்து வந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உற்சவத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதியன்று பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 1ம் தேதி அதிகாலை, நம்பெருமாள், பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து, சிம்மகதியில் புறப்படுவார். அதிகாலை, 5:30 மணிக்கு, பக்தர்களுடன் பரமபதவாசலைக் கடப்பார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுவார். இன்று, மூலவர் ரங்கநாதர் முத்தங்கியில் அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !