உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை

திருக்காமீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை நடந்தது. வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 39ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் 14ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, கடந்த மாதம் 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும், லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பஜனை, பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலா, இரவு 8:00 மணிக்கு பக்தி பாமாலை இசை நிகழ்ச்சி, 9:30 மணிக்கு ஆராதனை நடந்தது. விழாவிற்கு நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !