நங்கநல்லுார் கோவில்களில் அலைமோதிய கூட்டம்
ADDED :3964 days ago
நங்கநல்லுார்: அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, நேற்று நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பகல், விசேஷ அபிஷேகம், மதியம், வடைமாலை சாத்துதல் நடைபெற்றன. சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நேற்று இரவு வரை, கோவில் நடைதிறக்கப்பட்டிருந்தது.