மதுரை சின்மயா மிஷனில் அனுமன் ஜெயந்தி விழா!
ADDED :3963 days ago
மதுரை : மதுரை சின்மயா மிஷனில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் சாலீசா பாராயணம், அஷ்டோத்தரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.சுவாமி சிவயோகானந்தர் பேசுகையில், அனுமனை வழிபடுவதால் புத்தி, பலம், ஆரோக்கியம், செல்வம், செயல்திறன், பயமின்மை, புகழ் இவற்றோடு நம் பாரத தேசமும், தர்மமும் தழைக்கும் என்றார்.தேவி குழுவினர், செயலர் திலகர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.