உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுக்கரை அய்யப்பன் கோவில் விளக்கு திருவிழா!

மதுக்கரை அய்யப்பன் கோவில் விளக்கு திருவிழா!

குறிச்சி : மதுக்கரை மரப்பாலம் அருகே, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், ௧௮ம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. கடந்த, 19ம் தேதி அதிகாலை கணபதி பூஜையுடன், விழா துவங்கியது. தொடர்ந்து, பறையெடுப்பு, பாலமணிகண்டன் அழைத்து வருதல்; இரவு ௭.௦௦ மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன.நேற்று முன்தினம் காலை உஷ பூஜையும், பறையெடுப்பும் நடந்தது. மாலை, தர்மலிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மீது, அய்யப்பன் ஊர்வலம், பாலவிநாயகர் கோவிலுக்கு சென்று, மீண்டும் மாதங்கி சேவா அறக்கட்டளையை வந்தடைந்தது. நள்ளிரவு பால் குட எழுந்தருளல் ஊர்வலம், பூ மிதித்தல் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !