சிவ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3959 days ago
காரைக்குடி : காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் உள்ள சிவ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 10 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனையும்,அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சியில் காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மைதிலி, சூரக்குடி ஊராட்சி தலைவர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துராமன் செய்திருந்தார்.
* திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த ஆஞ்சநேயர் ஜெயந்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று காலை 8 மணிக்கு , நின்ற நிலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சந்தனக் காப்புடன் மஞ்சள் பட்டுடுத்தி, வடை, கடலை, பழமாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.