உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அனுமன் ஜெயந்தி விழா

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் அனுமன் ஜெயந்தி விழா

காரிமங்கலம்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவிலில்களில் நடந்த, சிறப்பு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம், கெரகோடஹள்ளி, வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை சிறப்பு ஹோமமும், 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாத்துதல், செந்தூர காப்பு, வெற்றிலை மாலை சாத்துதல் உட்பட சிறப்பு அலங்காரங்கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* காரிமங்கலம், அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு ரோடு, ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் பிரிவு ரோடு ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சந்தனகாப்பு ஆகியவை நடந்தது.

* தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், அதிகாலை, 3 மணிக்கு சிறப்பு ஹோமங்களும், 4 மணிக்கு மேல், 6 மணிக்குள் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. ஸ்வாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* கிருஷ்ணகிரியில், தேவசமுத்திரம் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், அதிகாலை சிறப்பு ஹோமமும், தொடர்ந்து ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், தங்க கவசம் சாத்துப்படியும் நடந்தது. மாலையில் தங்கத்தேரில் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது.

* தர்மபுரி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர், தொப்பூர் மன்ட்ரோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி கீழ்தெரு தாஸஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோடு கடமடை ஆஞ்சநேயர் கோவில் உட்பட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஹனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெண்ணெய் காப்பு, சந்தன காப்பு, தங்ககவசம், வெள்ளிகவசம் சாத்துதல், வடைமாலை சாத்துதல் உட்பட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

* மார்கழி அமாவாசையை யொட்டி, நெருப்பூரில் உள்ள முத்தையன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நாகமரை, ஒண்டனூர், பண்ண வாடி காடு, காமராஜ்பேட்டை போன்ற 20 கிராமங்களில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டியும், நாகமரை ஆற்றி லிருந்து புனித நீர் எடுத்து வந்து ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். தர்மபுரி, சேலம், ஈரோடு, பவானி போன்ற பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்வாமியை ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வந்தனர்.

மார்கழி மாத அமாவாசைக்கு விரதமிருந்து மாலையிட்டால், தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பர். இக்கோயிலில் வவ்வால்கள் நிறைந்து காணப்படும். இதனை வீரப்பன் கோவில் என்றும் அழைப்பர்.

* அரூர் வர்ணதீர்த்தம், சந்தைமேடு ஆஞ்சநேயர் கோயி லில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !