உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வின்ச்கள் 4 மணி நேரம் நிறுத்தம்

பழநி வின்ச்கள் 4 மணி நேரம் நிறுத்தம்

பழநி : பழநி கோயிலில் கூடுதலாக டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற உள்ளதால், முதல் முறையாக மூன்று வின்ச்களின் சேவைகளும் இன்று மதியம் 4 மணி நேரம் நிறுத்தப்படுகிறது. பழநி தெற்கு கிரி வீதியில் உள்ள கோயில் பவர் ஹவுசில் ரூ.50 லட்சம் மதிப்பில் 500 கி.வாட் திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மர் பொருக்கும் பணி இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த நேரத்தில் மின் வினியோகம் தடைபடுவதால், வின்ச்கள் இயக்கபடாது. பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் வின்ச்கள் செயல்படத் துவங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "" ஏற்கனவே 500 கி.வாட் டிரான்ஸ்பார்மர் உள்ளது. மேலும் 500 கி.வாட் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படுகிறது. இதனால் தைப்பூசம், பங்குனி உத்திரம் நேரங்களில் பயன்படுத்தப்படும் கூடுதல் மின்சாரத்திற்காக ஜெனரேட்டரை இயக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. ரோப்கார் வழக்கம் போல் இயங்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !