ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4089 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மூலவர் ராமநாதீஸ்வரருக்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திருத்தல இன்னிசைக் குழுவினரின் இசையுடன் பிரதோஷ மூர்த்தி கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வந் தார்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன்,சிவாச்சாரியார் பாலகிருஷ்ணன்,ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தனர்.