நல்லதை மட்டுமே நினைப்போம்!
இந்த உலகத்தில் எல்லார் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது.ஏன் இந்தக் கடவுள் இந்த உலகத்தைப் படைக்க வேண்டும்? இங்கு இன்பத்தையும், சிரமத்தையும் ஏன் தர வேண்டும்?இதற்குப் பதில் இதுதான்.தேவன் மனிதர்களை படைக்கும்போது,தம்மை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அறிவதற்காக நமக்கு சுயாதீன உரிமையைக் (சுதந்திரம்) கொடுத்தார். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அவர், தன்னால் படைக்கப்பட்டவன் தன்னை மதிக்கிறானா என்பதை அறியத்தான், ஒரு மரத்தின் கனியை மட்டும் விலக்கினார். ஆனால், மனிதன் அதைப் போய் புசித்தான்.இப்போது சொல்லுங்கள், கடவுள் பிரச்னையை உருவாக்கினாரா? மனிதன் பிரச்னையை உருவாக்கிக் கொண்டானா? அவர் மகிழ்வுடன் தந்த அத்தனையையும் விட்டுவிட்டு, அவர் விலக்கியதை புசிப்பானேன்?புத்தாண்டு வருகிறது. சிலருடைய திட்டமிடல் என்ன! எந்த சர்ச்சுக்கு போவது! குழந்தைகளுக்கு என்ன வகையான புத்தாடை, கேக் வாங்கிக் கொடுப்பது! ஏழைகளுக்கு உதவுவதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும்? என்பதாக இருக்கிறது. ஆனால், இன்னும் சிலருடைய திட்டமிடல் என்ன! எந்தக் கடைக்கு போவது? நண்பர்களை வரச்சொல்லி குடிப்பது? புகை பிடிப்பது என்றல்லவா இருக்கிறது! கடவுள் குடிக்கச் சொன்னாரா? சீட்டாடச் சொன்னாரா? புகை பிடிக்கச் சொன்னாரா? எதுவுமே இல்லையே! இத்தகைய வழக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்கள் மனிதர்கள் தான்! இப்படி, கடவுள் தந்த நல்லதையெல்லாம் விட்டு விட்டு, பாவிகள் ஆனோம். ஆனாலும் கூட, தேவன் நம் மேல் கருணை கொண்டு மனித ரூபத்தில் நம்மிடையே வரத்தான் செய்தார். நம்மைப் பரிசுத்தப்படுத்தினார். அதன்பிறகும், நாம் பாவத்தின் பாதையில் சென்றால் அதற்கு யார் பொறுப்பு?இந்த நேரத்தில் பைபிள் நமக்கு சொன்ன வசனத்தை நினைவு கொள்வோம்.தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்: 4:8).ஆம்! இந்த புத்தாண்டு முதலாவது தேவன் நமக்களித்த நல்ல விஷயங்களை மட்டும் மனதில் கொள்வோம். பொறாமை, பொய், ஏமாற்று, கெட்ட வழக்கங்களைக் களைவோம். நல்லதையே மனதில் நினைத்து, நல்லதையே பிறருக்குச் செய்ய உறுதியெடுப்போம். ஆண்டவர் என்றும்நம்மோடு இருப்பார்.